சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய தி.மு.க. உறுப்பினர் செங்குட்டுவன், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் போராட்டங்கள் நடப்பதாகத் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் வேலுமணி, மழை பொய்த்ததாலேயே குடிநீர்ப் பிரச்சினை நிலவுவதாகவும் அதனைச் சமாளிப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஆனால் தொலைக்காட்சிகளில் பார்க்கும்போது மக்கள் புதிய குடங்களுடன் போராடுவதைப் பார்க்க முடிவதாகத் தெரிவித்த அவர், குடிநீர்ப் பிரச்சினையை அரசியல் ஆக்காமல் போராட்டத்தைத் தவிர்த்து ஆளும் கட்சிக்கு ஆலோசனை வழங்கினால்தான் மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசால் செயல்பட முடியும் என்றார்.

