கிராமிய சுகாதாரம்: தமிழகம் முன்னோடி

கிராமிய சுகாதாரம்: தமிழகம் முன்னோடி

1 mins read

சென்னை: கிராமப்புற சுகாதாரச் சேவையை மேம்படுத்து வதில் இந்தியாவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சட்டமன்றத்தில் கேள்விக்குப் பதில் அளித்த அவர், தமிழகத்தில் கடந்த ஆண்டு 12 ஆரம்ப சுகாதார நிலையங்களும் கடந்த 8 ஆண்டுகளில் 254 சுகாதார நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகக் தெரிவித்தார்.