சென்னை: திமுகவினருக்கு சாதகம் சரியில்லை என்று முதல்வர் பழனிசாமி சட்ட மன்றத்தில் கூறினார்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜூ மன்றத்தில் ஒரு கதையைச் சொல்லி, "சிலருக்கு மணமேடை அமையும், மணமகள் அமையும், திருமணம் மட்டும் நடக்காது. அவர் யார் என்பதை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்," என்றார். இதை திமுக - எம்எல்ஏக்கள் எதிர்த்தனர்.
அப்போது முதல்வர், தங்களுக்கு ஜாதகம் நன்றாக இருப்பதால் தாங்கள் ஆட்சியில் நல்ல நிலையில் இருப்பதாகவும் ஜாதகம் சரியில்லாததால்தான் திமுகவினர் மேலேயும் இல்லாமல் கீழேயும் இல்லாமல் இடையில் தொங்கிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

