வைகோவின் தண்டனையை நிறுத்திவைத்த நீதிமன்றம்

வைகோவின் தண்டனையை நிறுத்திவைத்த நீதிமன்றம்

1 mins read
65f95d9c-73c7-46c4-b748-0c76f974d37c
-

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு சீர்குலைவுச் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறைத்தண்டனையை விதிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆயினும், வைகோவின் வழக்கறிஞர் முன்வைத்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அந்தத் தண்டனையை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்திருக்கிறது.

2009ஆம் ஆண்டில் நேர்ந்த புத்தக விழா ஒன்றில் இந்திய அரசுரிமைக்கு எதிராக பேசியதன்பேரில் வைகோ மீது வழக்கு தொடரப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து போர் தொடுத்தால் அது தொடர்ந்து ஒரு நாடாக நீடிக்காது என்று கூறியதற்காக அவர் குற்றம் சாட்டப்பட்டார். இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் வைகோவைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்திருக்கிறது. ஓராண்டுச் சிறைத்தண்டனையுடன் வைகோவுக்கு 10,000 ரூபாய் அபராதமும் நீதிமன்றம் விதித்தது.

10,000 ரூபாயைக் கட்டிய வைகோ, தீர்ப்பை நிறுத்தி வைக்கும்படி மனுத்தாக்கல் செய்ததை நீதிமன்றம் ஏற்றது. நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, " என் கருத்தைத் தொடர்ந்து விதைப்பேன், தொடர்ந்து விடுதலை புலிகளை ஆதரித்து பேசுவேன்" என சூளுரைத்தார்.