அமைச்சர்: இனி அது திமுக அல்ல, 'குமுக'

அமைச்சர்: இனி அது திமுக அல்ல, 'குமுக'

1 mins read

சென்னை: தமிழ்நாட்டில் முக்கிய எதிர்க்கட்சியான திமுக இனி திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல அது குடும்ப முன்னேற்றக் கழகம் (குமுக) என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி (படம்) சட்டமன்றத்தில் குறிப்பிட்டார்.

திமுகவில் அதிகார மையங் கள் ஒரே குடும்பத்தில் சூழ்ந்துள் ளன என்று கூறத்தக்க அளவுக்கு இப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது என்றாரவர்.

உதயநிதியைவிட நல்ல தலை வர்கள் திமுகவில் இருப்பதாகவும் ஆனால் எந்த தகுதியும் இல்லாத உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப் பட்டு இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். ஸ்டாலினின் புதல்வர் என்ற ஒரே தகுதிதான் உதய நிதிக்கு இருக்கிறது என்றார் அமைச்சர் பாலாஜி.