நெல்லூர்: ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை தமிழ் நாட்டு மீனவர்கள் கடத்திவிட்டார் கள் என்று புகார் எழுந்துள்ளதை அடுத்து இரு மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு இடையில் பழவேற்காடு ஏரிப் பகுதியில் பதற் றம் நிலவுகிறது.
பழவேற்காடு ஏரி இந்தியாவில் உள்ள இரண்டாவது ஆகப்பெரிய உப்புநீர் ஏரியாகும். அந்த ஏரி தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் எல்லையில் அமைந்துள்ளது.
அந்த ஏரியின் 96% பகுதி ஆந்திராவுக்குச் சொந்தம். எஞ்சிய பகுதி மட்டுமே தமிழகத்துக்குச் சொந்தம். இருந்தாலும் கோடை காலத்தில் பழவேற்காடு ஏரியில் தமிழ்நாட்டிற்குச் சொந்தமான பகுதியில் மட்டுமே நீர் இருக்கும். அந்த ஏரியின் ஆந்திரப் பகுதி முற்றிலும் வற்றிவிடும்.
இதனால் ஆந்திராவைச் சேர்ந்த மீனவர்கள் அந்த ஏரியின் தமிழகப் பகுதியில் வந்து மீன் பிடிப்பார்கள்.
இந்த நிலையில், அப்படி மீன் பிடிக்க வந்த ஆந்திராவைச் சேர்ந்த 12 பேரை தமிழக மீனவர் கள் கடத்திவிட்டதாகச் செய்தி பரவியது. இந்தப் பிரச்சினைக்கு ஆந்திரப் பிரதேச அரசாங்கமே காரணம் என்று கூறப்படுகிறது.
இரண்டு மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு இடையில் அப்போதைக்கு அப்போது பிரச் சினை ஏற்பட்டு வருகிறது என்றும் பழவேற்காடு ஏரியை மீன்பிடிப் பதற்குத் தடையற்ற ஒரு பகுதியாக அறிவிப்பதே இதற்கான தீர்வு என்றும் கூறப்படுகிறது.
இந்த ஏரி சென்னையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் அமைந்து இருக்கிறது. ஆற்று நீருக்கும் கடலுக்கும் இடைப்பட்ட உப்பங்கழியாக இந்த ஏரி விளங்கு கிறது.

