50 சொந்த வீடுகள் வைத்திருக்கும் காவல்துறை ஆய்வாளர் மீது புகார்

50 சொந்த வீடுகள் வைத்திருக்கும் காவல்துறை ஆய்வாளர் மீது புகார்

1 mins read
2942cc76-94ed-4a92-979a-42b07c86b8f8
திருவண்ணாமலை மாவட்டத்தில் உளவுத்துறை ஆய்வாளராக பணி புரிந்தபோது ரமேஷ்ராஜ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகப் புகார் எழுந்தது.  -

வேலூர்: காவல்துறை ஆய்வாளர் ஒருவருக்கு சொந்தமாக ஐம்பது வீடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இத்தகவல் போலிசார் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் விவாதங்களையும் எழுப்பி உள்ளது.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்ராஜ். இவர் வணிகவியல் குற்றப் புலனாய்வுத்துறை ஆய்வா ளராக உள்ளார்.

இந்நிலையில் கடந்த 2010ல் இருந்து 2013ஆம் ஆண்டு வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் உளவுத்துறை ஆய்வாளராக பணி புரிந்தபோது ரமேஷ்ராஜ் வருமா னத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகப் புகார் எழுந்தது.

இதுகுறித்து உயரதிகாரிக ளுக்கு தெரியவந்ததை அடுத்து, விசாரணை நடத்த உத்தரவிட்டனர். இதன்பேரில் லஞ்ச ஒழிப்புப் போலிசார் ரமேஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடை பெற்று வருகிறது.

இந்நிலையில் வேலூர் மாவட் டம் இடையான்சாத்துவில் உள்ள ரமேஷ்ராஜின் வீடு, ஊசூர்தெல்லூரில் உள்ள அவரது தந்தை வீடு உள்ளிட்ட சில இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. அவற்றின் மூலம் ரமேஷ்ராஜ் தன் பெயரிலும் உறவினர்கள் பெயரிலும் ஐம்பது வீடுகள் வாங்கியிருப்பது தெரியவந்துள் ளது.

சோதனை நடவடிக்கை மூலம் ரமேஷ்ராஜுக்கு 10 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் இருப்பது உறுதியாகி உள்ளது என்றும் விசாரணை நீடித்து வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை இணை கண்காணிப்பாளர் கூறினார். இவ்வழக்கு போலிசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.