நிர்வாகிகளை அனுசரித்துச் செயல்படுமாறு தினகரனுக்கு சசி அறிவுறுத்தியதாக தகவல்

நிர்வாகிகளை அனுசரித்துச் செயல்படுமாறு தினகரனுக்கு சசி அறிவுறுத்தியதாக தகவல்

2 mins read

சென்னை: சிறைவாசம் முடிந்து தாம் வெளியே வரும் வரை கட்சி நிர்வாகிகளை அனுசரித்துப் போகுமாறு அமமுக பொதுச் செயலர் தினகரனுக்கு, பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா அறிவுறுத்தி இருப்பதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் தோல் விக்குப் பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் விலகி வருகின்றனர். குறிப்பாக தினகர னின் வலது கரமாகக் கருதப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன் விலகியது அமமுக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி யது.

இதையடுத்து கட்சி அலுவலகம் செயல்பட இடம் கொடுத்த அக் கட்சியின் அமைப்புச் செயலர் இசக்கி சுப்பையாவும் விலகினார். அடுத்தடுத்து சில நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகிய நிலையில், அண்மையில் சசிகலாவை சிறையில் சந்தித்துப் பேசியுள்ளார் தினகரன்.

கட்சியில் தற்போதுள்ள நிர்வா கிகளை அனுசரித்துச் செயல்பட வேண்டும் என சசிகலா அவருக்கு ஆலோசனை கூறியதாகத் தெரி கிறது. நிர்வாகிகள் கட்சியைவிட்டு விலகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சசிகலா அறிவுறுத்திய தாக தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

"அதிமுக தற்போது கட்டுக் கோப்பாக இருப்பது போல் தோன்றும். எனினும் ஆட்சிக்காலம் முடிந்த பின்னர் யாருக்கு அதிகாரம் என்ற போட்டி ஏற்படும்போது உட்கட்சிப் பூசல் அதிகரிக்கும்.

"அதுவரை அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்பவர்கள் குறித்து கவலைப்பட வேண்டாம். கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தால் போதும். நான் வெளியே வந்தபிறகு அடுத்த அதிரடி நடவடிக்கைகளை மேற் கொள்ளலாம். உண்மையான விசு வாசிகளை மட்டும் இழந்துவிடக் கூடாது என்பதில் கவனம் தேவை," என்று தினகரனிடம் சசிகலா கூறியிருப்பதாக தமிழக ஊடகச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.