மாநிலங்களவைக்கு வைகோ மனுத் தாக்கல்

மாநிலங்களவைக்கு வைகோ மனுத் தாக்கல்

1 mins read

சென்னை: ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றுள்ள மதிமுக பொதுச்செயலர் வைகோ மாநிலங்க ளவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. இந்நிலையில் அவர் நேற்று தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசியதாக கடந்த 2009ஆம் ஆண்டு வைகோ மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அவர் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங் கியது. மேலும் வைகோவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதத் தொகை யும் விதிக்கப்பட்டுள்ளது. இத னால் மதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து அவர் தேர்தலில் போட்டியிட இயலாது என ஒரு சாரார் தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர் அவருக்கு ஆதரவாக உள்ளனர்.

இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற் றும் திமுக வேட்பாளர்கள் சண் முகம், வில்சன் ஆகியோர் தங்க ளது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதற்காக நேற்று கட்சி நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகம் வந்தார் வைகோ. அவ ருடன் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் வந்திருந்தனர்.