தமிழக அரசுப் பேருந்துகளில் இந்தி அறிவிப்பு; தமிழுக்கு இடமில்லை என கனிமொழி புகார்

தமிழக அரசுப் பேருந்துகளில் இந்தி அறிவிப்பு; தமிழுக்கு இடமில்லை என கனிமொழி புகார்

2 mins read
eccc4ccb-fe27-4f4d-9bda-9f73ca071fba
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் உள்ளதைப்போல் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பேருந்துகளிலும் இந்தி திணிப்பு இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. படம்: ஊடகம் -

சென்னை: மத்திய அரசு இந்தி மொழியைத் திணிப்பது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, தமிழக அரசும் அதே வேலையைச் செய்வ தாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் பதி விட்டுள்ளார். அதில் தமிழக அரசுப் பேருந்தில் தமிழுக்குப் பதிலாக இந்தி மொழியில் அறி விப்பு இடம்பெற்றிருப்பதை அவர் புகைப்படத்துடன் சுட்டிக் காட்டி உள்ளார்.

தமிழகப் போக்குவரத்துக் கழ கங்களுக்காக 1,500 கோடி ரூபாய் செலவில் 5,000 புதிய பேருந்துகள் வாங்குவது தொடர்பாக கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அரசாணை வெளியிடப் பட்டது. இதுவரை 1300க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப் பட்டுள்ளன.

இந்நிலையில் கடைசியாக வாங்கப்பட்ட 500 புதிய பேருந்துகளில் அவசர வழி என்று குறிப்பிடும் பகுதியில் தமிழுக்குப் பதிலாக ஆங்கிலம், இந்தியில் மட்டுமே அறிவிப்பு எழுதப்பட்டுள்ளது. இதற்கு திமுக தலைமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழக மக்களின் வரிப்பணத் தில் புதிதாக வாங்கியுள்ள பேருந் து­களில் தமிழுக்கு இடமில்லை என கனிமொழி சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

"மத்திய அரசின் இந்தித் திணிப்பு ஒருபுறம் என்றால், தமிழக அரசும் சளைத்தவர்கள் அல்ல என்று இந்தி மொழியைத் திணிக்கும் தமிழக அரசுக்குக் கண்டனம்," என்று கனிமொழி மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தமிழக அரசுப் பேருந்துகளில் இந்தி எழுத்துக் களில் அறிவிப்புகள் ஏதும் இல்லை என போக்குவரத்துத் துறை விளக்கமளித்துள்ளது. ஒரே ஒரு அரசுப் பேருந்தில் மட்டுமே இந்தி மொழியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததாகவும், அதுவும் அகற்றப் பட்டு விட்டது என்றும் அத்துறை தெரிவித்துள்ளது.

வெளிமாநிலத்தில் தயாரிக்கப் பட்ட பேருந்துகள் என்பதால் சில பேருந்துகளில் இந்தி எழுத்துக்கள் காணப்பட்டன. எனினும் பயணிக ளின் சேவைக்காக அவற்றை இயக்கும் முன்பே அந்த ஸ்டிக்கர் கள் அகற்றப்பட்டு விட்டன. தற்போது தமிழக அரசுப் பேருந்து கள் எதிலும் இந்தி எழுத்துக்கள் இல்லை," என போக்குவரத்துத் துறை மேலும் தெரிவித்துள்ளது.