காணாமல் போன முகிலன்  திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டார்

சென்னை: கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமான சமூக செயற்பாட்டாளர் முகிலன் தற் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

திருப்பதி ரயில் நிலையத்தில் வைத்து ஆந்திரப் போலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பின்னர் தமிழக போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப் படுகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீவிரப் போராட்டங்களை மேற்கொண்டவர் களில் முகிலனும் முக்கியமானவர். மக்கள் நலம் சார்ந்த பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த வர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து மதுரைக்குச் சென்ற அவர், பாதி வழியில் ரயிலில் இருந்து இறங்கி உள்ளார். அதன்பிறகு அவர் எங்கு சென்றார்? என்னவானார்? என்பது குறித்து ஒரு தகவலும் இல்லை.

இதையடுத்து முகிலனை கண்டுபிடிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனுத்தாக்கல் செய்யப் பட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக போலிசார் அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

அவர் உயிருடன் இருப்பதாகக் காவல்துறை சார்பில் நீதிமன்றத் தில் ரகசிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலனைப் பார்த்ததாக அவரது நண்பர் சண்முகம் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர போலிசார் முகிலனைக் கைது செய்த தகவலும் அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகின. கைது செய்யப்படும் போதும் ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குள அணுமின் நிலையத் துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி உள்ளார் முகிலன்.

போலிசார் அவரை விசார ணைக்காக அழைத்துச் சென்ற போது மற்றொரு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த சண்முகம் திருப்பதி ரயில் நிலையத்தைக் கடக்கும் போது முகிலனைக் கண்டுள்ளார்.

இதற்கிடையே நேற்று முன் தினம் நள்ளிரவு சென்னை போலி சாரிடம் முகிலன் ஒப்படைக்கப்பட்ட பிறகு அவருக்கு அரசு மருத்துவ மனையில் மருத்துவப் பரி சோதனை நடத்தப்பட்டது. சரி யாக உணவருந்தாத காரணத்தால் அவர பலவீனமாக இருப்பதாகவும், அவரை நாய் கடித்ததற்கான தழும்பு உடலில் காணப்படுவ தாகவும் கூறப்படுகிறது.

முகத்தை மறைக்கும் அள வுக்கு தாடியுடன் காணப்படும் முகிலன், நெருக்கமானவர்களால் கூட கண்டுபிடிக்க முடியாத அள விற்கு தோற்றமளிப்பதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே முகிலனைக் காண சொந்த ஊரில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தபோது அவரது மனைவி விபத்தில் சிக்கினார். எனினும் சிறு காயங்களுடன் அவர் உயிர் தப்பியதாகக் கூறப் படுகிறது.

இதையடுத்து சிகிச்சைக்குப் பிறகு அவர் சென்னைக்குப் புறப் பட்டதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. மாயமான காலத்தில் முகிலன் யாரிடமிருந்தார்? என்ன செய்து கொண்டிருந்தார்? என்பது குறித்து சிபிசிஐடி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் விரைவில் நீதிமன்றத் தில் முன்னிலையாவார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!