நாடு முழுவதும் குறிப்பிட்ட ஒருசில பகுதிகளில் வசிக்கும் மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.
குடிநீருக்காக மக்கள் பலரும் மைல் கணக்கில் நடந்து சென்றும் நள்ளிரவு நேரத்தில் குழாயடியிலேயே படுத்துத் தூங்கியும் தண்ணீரை சேகரிக்கும் நிலை இருந்து வருகிறது. ஒருசிலர் ஊற்று நீரை சேகரித்தும் குடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாட்டில் எந்தெந்த நக ரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு மோசமாக உள்ளது என்று நடத்தப்பட்ட ஆய்வில் 17% நகரங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு மோசமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நகரங்களில் தமிழ்நாடு முத லிடத்தில் இருப்பதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.
இதற்கு அடுத்த இடங்களில் ராஜஸ் தான், உத்தரப் பிரதேச மாநிலங்கள் உள்ளன.
பருவமழை பொய்த்ததால் சென்னை நகரம் தண்ணீர்த் தட்டுப்பாட்டால் தவிக் கிறது. தமிழ்நாட்டின் பல நகரங்களிலும் இந்த நிலையே காணப்படுகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளிலும் இப்போது அதிகரித்து வரும் தண்ணீர்த் தட்டுப்பாட்டை தடுப்ப தற்காக மத்திய அரசு பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அதன் அடிப்படையில் நீர் ஆதாரத்தை மேம்படுத்த ஜலசக்தி துறை என்று ஒரு துறை உருவாக்கப்பட்டு அதற்கு அமைச் சரும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இதன் முதல்கட்டமாக நாடெங்கும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாவட் டங்கள், வட்டாரங்களைக் கண்டறிந்து நீர் ஆதாரத்தை மேம்படுத்த உள்ளனர்.
அதன்படி நாடு முழுவதும் மொத்தம் 255 மாவட்டங்களிலும் 756 நகரங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு மோசமாக உள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 27 மாவட்டங்களிலும் 184 நகரங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
ராஜஸ்தானில் 29 மாவட்டங்களிலும் 119 நகரங்களிலும் உத்தரப் பிரதேசத்தில் 35 மாவட்டங்களிலும் 84 நகரங்களிலும் பஞ்சாப்பில் 20 மாவட்டங்களிலும் 82 நகரங்களிலும் கர்நாடகாவில் 18 மாவட் டங்களிலும் 57 நகரங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு மோசமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது.
தலைநகரம் டெல்லியும் தண்ணீர்த் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கிறது. அங்குள்ள 756 பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது.
டெல்லியைச் சுற்றி அமைந்துள்ள உத்தரப்பிரதேசம், அரியானா மாநில நகரங்களிலும் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது.
காசியாபாத், நொய்டா, பரிதாபாத் ஆகிய நகரங்கள் தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கி உள்ளன.
பஞ்சாப், அரியானா மாநிலங்களிலும் பல நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு விவசாயத்திற்கு அதிக அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப் படுவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

