வேலூர்: வேலூர் மக்களவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன் னேற்றக் கழகம் போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரி வித்துள்ளார்.
வேலூர் மக்களவை தொகு திக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இதுகுறித்து விருத் தாசலத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தினகரன் கூறுகை யில், "எனது அமமுக கட்சிக்கு என்று ஒரு நிலையான சின்னம் எதுவும் இன்னும் கிடைக்க வில்லை.
"சின்னம் கிடைத்தபிறகே தேர்தல்களில் போட்டியிட திட்டம் தீட்டியுள்ளோம். அதுவரை பொறு மையாகக் காத்திருந்து பின்னர் வெற்றியை நோக்கி காய் நகர்த்த திட்டமிட்டுள்ளோம்.
"அமமுகவை கட்சியாகப் பதிவு செய்யும் பணி இன்னும் நிறை வடையாத நிலையில், வேலூர் மக் களவைத் தேர்தலில் அமமுக போட்டியிடாது," என்றார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை, இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தின கரனின் அமமுக கட்சி ஓரிடத்தில் கூட வெற்றிபெறவில்லை.
இதன்பின் இக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் அமமுகவை விட்டு விலகினர். இதனால் அவரது கட்சி பெரும் சறுக்கலை சந்தித்து வருகிறது.

