சீமான்: தீபலட்சுமி போட்டியிடுவார்

சீமான்: தீபலட்சுமி போட்டியிடுவார்

1 mins read
885d0e3b-1053-4090-be69-68e219c648b0
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், படம்: ஊடகம் -

வேலூர்: வேலூர் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடக்கவிருக்கிற வேலூர் மக்களவைத் தொகுதிக்கானத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி போட்டியிடுவார்.

கட்சியின் அனைத்து பொறுப்பாளர்களும் அவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனவும் மாநிலம் முழுவதும் உள்ள உறவுகள் அனைவரும் இக்களத்தில் பங்கேற்று தங்களது பங்களிப்பைச் செலுத்தி வெற்றிக்கு உழைக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.