ரவீந்திரநாத் பெற்ற வெற்றி போலியானது என வழக்கு

ரவீந்திரநாத் பெற்ற வெற்றி போலியானது என வழக்கு

1 mins read
263da56e-b870-46e4-8484-01392954d900
வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் -

சென்னை: தேனி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் பெற்ற வெற்றியை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.

தேனி தொகுதியைச் சேர்ந்த மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத் துள்ள வழக்கில், "தேனி தொகுதியில் மக்களவைத் தேர் தல் நடைபெற்றபோது, அங் குள்ள மக்களின் வாக்குகளைப் பெற அவர்களுக்கு கத்தை கத்தையாகப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதனை அதிமுகவினர் திட்டமிட்டு செய் துள்ளனர். எனினும் இதனைத் தேர்தல் ஆணையம் தடுக்கவோ கண்டு கொள்ளவோ இல்லை.

"தேனி தொகுதியில் பணப் பட்டுவாடா செய்ததற்கு ஆதாரங் கள் உள்ளன. எனவே ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றதை செல்லாது என அறி விக்க வேண்டும்," என கோரிக்கை விடுத்துள்ளார்.

இம்மனு விரைவில் தனி நீதி பதி முன் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது மகன் ரவீந்திரநாத் குமாருக்கு எப்படியாவது மத்திய அமைச்சர் பதவி வாங்கிவிட வேண்டும் என்று ஆசைப்பட்ட துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துக்கு இந்த வழக்கு தலைவலியாய் அமையும் என்றும் மகனின் எம்.பி பதவிக்கே இப் போது சிக்கல் ஏற்பட்டுள்ள தாகவும் கூறப்படுகிறது.