சென்னை: ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஹோட்டல் சரவணபவன் உரிமை யாளர் ராஜகோபால் தவிர்த்து மற்ற ஒன்பது குற்றவாளிகளும் சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தனர்.
நேற்று பூந்தமல்லி நீதிமன்றத் தில் ராஜகோபால் சரணடைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் நேற்று அவர் சரணடைய வில்லை என்றும் 71 வயதாகும் ராஜகோபாலுக்கு உடல்நிலை சரி யில்லாததால் அவரால் சரண் அடைய முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
நரம்பு மண்டல நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் தன்னால் உடனடியாகச் சரணடைய இயலாது என்றும் ராஜகோபால் தரப்பில் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
சென்னை, சிங்கப்பூர், அமெரிக்கா, சிட்னி, பிரிட்டன் என்று அனைத்து இடங்களிலும் சரவண பவன் ஹோட்டல்கள் உள்ளன. அதன் உரிமையாளர்தான் பி. ராஜகோபால்.
தமிழகத்தின் திருநெல்வேலி யில் வெங்காய வியாபாரியின் மக னாகப் பிறந்த ராஜகோபால், 1981ல் சென்னையில் சிறிய மளிகை கடையுடன் உணவகத் தையும் துவக்கினார்.
இவரது ஹோட்டல் உணவு பலருக்கும் பிடித்துப் போக உல கெங்கும் இவரது உணவகங்கள் பரவின. தற்போது 80 நாடுகளில் இவரது உணவகம் உள்ளது.
ராஜகோபால், தனது ஹோட்டலில் பணிபுரிந்த ஊழியரின் மனைவி யான ஜீவஜோதியை 3வது மனைவியாக அடைய நினைத்து, ஜீவஜோதியின் கணவர் சாந்த குமாரை கூலிப்படை வைத்து கொன்றதாக வழக்கு பதிவானது.

