சென்னை: திருமணத்தின்போது தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள், பணத்தை மொய் பரிசாக திரு மணத்துக்கு வருகை தரும் விருந்தினர்கள் அன்பளிப்பு வழங்கி வரும் நிலையில் இப் போது ஒரு புது அன்பளிப்பாக தண்ணீரை பரிசளித்துள்ளனர் அம்பத்தூர் பகுதி மக்கள்.
சென்னை உட்பட தமிழகத் தின் பல பகுதிகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், இந்த தண்ணீர் பஞ்சத்தை உணர்த்தும் வகையில் சென்னை அம்பத்தூரில் திருமண ஜோடிக்கு நண்பர்களும் உற வினர்களும் தண்ணீர் கேன் களைப் பரிசாக வழங்கினர்.
திருமணத்திற்கு உறவினர் கள், நண்பர்கள், அக்கம்பக்கத் தினர் என ஏராளமானோர் வருகை தந்திருந்தனர்.
இவர்கள் தண்ணீர் தட்டுப் பாட்டை உணர்த்தும் விதமாக அம்பத்தூரில் புதுமண தம்பதிக் குத் தண்ணீர்க் கேன்கள் பரிசாக வழங்கினர்.
சென்னை, அம்பத்தூர் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் மணமகன் பாலாஜி மணமகள் ஜனனி திருமண விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தண்ணீர்ப் பஞ்சத்தை உணர்த்தும் வகை யிலும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தியும் மணமக்களுக்கு நண்பர்கள், உறவினர்கள் 10 லிட்டர் தண்ணீர்க் கேனைப் பரிசாக வழங்கினர்.
தட்டுப்பாடு காரணமாக பல விடுதிகள் தற்காலிகமாக மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது.

