வைகோவுக்கு மாற்று வேட்பாளராக இளங்கோ

வைகோவுக்கு மாற்று வேட்பாளராக இளங்கோ

2 mins read

சென்னை: தமிழகத்தில் ஆறு இடங்களுக்கான மாநிலங்கள வைத் தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர் தலுக்காக வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை நேற்று தாக்கல் செய்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் தற் போதுள்ள உறுப்பினர்களின் அடிப் படையில் ஆளும் கட்சியான அதிமுக, எதிர்க்கட்சியான திமுக தலா 3 உறுப்பினர்களைத் தேர்வு செய்யமுடியும்.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய நேற்றே இறுதி நாள் என்பதால், திமுக கூட்டணி சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார்.

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வைகோவின் வேட்பு மனு ஒருவேளை நிராகரிக்கப்படும் சூழ்நிலையில் திமுகவின் சார்பில் வைகோவுக்கு பதிலாக என்.ஆர் இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே திமுக வேட்பாளர் கள் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகிய இருவரும் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டனர்.

இதுதொடர்பாக வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் மாநிலங்களவை உறுப்பின ராக வேண்டும் என்று ஸ்டாலின் விரும்பினார். மாநிலங்களவைத் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவ தாக இருந்தால் ஒரு இடம் வழங் குகிறேன் என்று ஸ்டாலின் என் னிடம் கூறினார்.

"அதன் அடிப்படையில்தான் மதிமுகவுக்கு ஓரிடம் ஒதுக்கப் பட்டது. அது எனக்கான இடம் தான். இந்தியாவில் தேச துரோக வழக்கில் தண்டனை பெறும் முதல் நபராக நான் உள்ளேன்.

"இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெறும் பட்சத்திலேயே ஒருவரால் தேர்த லில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். ஆனால் எனக்கு ஓராண்டு மட்டுமே தண்டனை விதித்துள்ளதால் நான் போட்டி யிடுவதில் எந்த சிக்கலும் இல்லை.

"இருப்பினும் ஒருவேளை என் னுடைய வேட்புமனு நிராகரிக்கப் பட்டால், மாற்று வேட்பாளரை தயார் செய்து வைத்துக்கொள்ளு மாறு நான்தான் ஸ்டாலினிடம் வலியுறுத்தினேன்.

"ஒருவேளை எனது மனு ஏற்கப்படும் பட்சத்தில் திமுக வேட்பாளர் என்.ஆர். இளங்கோ வேட்புமனுவை திரும்பப் பெற்றுக் கொள்வார். அதே தருணத்தில் எனது மனு நிராகரிக்கப்படும் பட்சத்தில் இளங்கோ போட்டியிடு வார். என்.ஆர். இளங்கோ எனக்கு மாற்று வேட்பாளராகவே களம் இறக்கப்பட்டுள்ளார்," என்றார்.

இந்நிலையில், அதிமுக வேட் பாளர்கள் முகமது ஜான், சந்திர சேகரன் ஆகிய இருவரும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசும் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுக் கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.

வேட்பு மனுவைத் திரும்ப பெறுவதற்கு வரும் 11ஆம் தேதி கடைசி நாளாகும் என்ற நிலையில், இந்த அறுவரும் போட்டியின்றி மாநிலங்களவைக்குத் தேர்வு செய் யப்படுவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது.