திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அருகே காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தூத்துக்குடியில் இருந்து அம்பாசமுத்திரம் நோக்கி சென்றுகொண்டிருந்த காரும், திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் வந்த அருள்மணி, பன்னீர் உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் ஒருவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

