இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்கள் அவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மொத்தம் 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கின்றர். வைகோ, திமுகவின் ஆதரவைப் பெற்று மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.
பிரிவினைவாதத்தைத் துண்டக்கூடிய பேச்சு ஒன்றின் தொடர்பில் வைகோவிற்கு ஓராண்டு சிறை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனு ஏற்கப்படுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது . இந்நிலையில் வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளதை அவரது வழக்கறிஞர் உறுதி செய்தார்.

