மருத்துவக் கல்வி: வெளி மாநில மாணவர்களுக்குக் கூடுதல் இடம்

மருத்துவக் கல்வி: வெளி மாநில மாணவர்களுக்குக் கூடுதல் இடம்

1 mins read

சென்னை: தமிழக தரவரிசைப் பட்டியலில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 218 பேர் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது.

ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்தாய்வைத் தொடங்கிவைத்தார்.

மருத்துவ சேர்க்கையில் இந்த ஆண்டு கூடுதலாக 350 இடங்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்த நிலையில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 218 மாணவர்கள் தமிழக மருத்துவக் கல்விக்கு விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த 218 பேரும் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர். சான்றிதழ்கள் சரிபார்த்த பின்னரே இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழகத்தில் பிறந்ததற்கான இருப்பிடச் சான்றிதழ் இருந்தால் மட்டும் 218 பேருக்கும் இடம் அளிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது.