திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்திறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நளினி (42 வயது) என்பவரிடம் 150 கிராம் தங்க நகைகள் சிக்கின. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், நளினியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
அப்போது சிங்கப்பூரைச் சேர்ந்த சிலர் தன்னிடம் வளையல்களைக் கொடுத்து அனுப்பியதாகவும் திருச்சி சென்றதும் விமான நிலையத்தின் வெளியே நிற்கும் தங்களது உறவினர்களிடம் கொடுக்குமாறு கூறி அனுப்பியதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

