கலப்பட உணவில் தமிழகமே முதலிடம்

கலப்பட உணவில் தமிழகமே முதலிடம்

2 mins read

சென்னை: பொதுமக்கள் முதல் சுற்றுப்பயணிகள் வரை பலரையும் நாவூறும் இந்திய உணவுகள் ஈர்த்து வரும் நிலையில், இந்த உணவுப்பொருள் விநியோகத்தில் கலப்படம் அதிகம் செய்யப்படுவ தாக அதிர்ச்சியூட்டும் தகவல் தெரியவந்துள்ளது.

நாட்டில் அதிகமான உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யப் படுவதாகக் கூறப்படும் மாநிலங் களில் தமிழகமே முன்னிலை வகிப்பதாகவும் உணவுப் பாது காப்பு, தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள தகவல் தெரி வித்துள்ளது.

நாடுமுழுவதும் 99,000 உணவு மாதிரிகள் சோதனைக்கு எடுத் துக்கொள்ளப்பட்டன. அவற்றில் 24,000 மாதிரிகளில் கலப்படம் இருப்பது உறுதியானது.

தமிழகத்தில் 5,730 உணவுப் பொருட்களில் நடத்தப்பட்ட சோத னையில் 2,601 உணவு மாதிரி களில் கலப்படம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இந்தியாவில் 2018-19ஆம் ஆண்டில் உணவுப்பொருட்களில் நடத்தப்பட்ட சோதனையில் மூன் றில் ஒரு பங்கு உணவுப் பொருட் கள் கலப்படம் செய்யப்பட்டவை என்ற தகவலை இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

இதில் முதல் இரு இடங்களில் தமிழகம், உத்தரப்பிரதேசம் உள்ள தாக அது தெரிவித்துள்ளது.

உணவு கலப்படம், அதனைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான கேள் விக்கு மக்களவையில் மத்திய உணவு, பொது விநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் பதிலளித்தபோது, "2016-2017, 2018-19ஆம் ஆண்டில் 8,100 பேர் தரமற்ற உணவு விநியோகம், கலப்படம் செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளனர். அத்து டன் ரூ.43.65 கோடி அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

"இந்தியா முழுவதும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் சோதனைகள் மேற்கொண்டுள்ளன.

"அந்த சோதனைகளின்படி கடந்த 2017-18ஆம் ஆண்டில் அதிகம் கலப்படம் செய்யப்படும் மாநிலங்களாக உத்தரப்பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர் இருந்தன.

"2018-19ஆம் ஆண்டில் உத்த ரப்பிரதேசம், தமிழ்நாடு, பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் உள்ளன," என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், "உணவுக் கலப் பட தடுப்புச் சட்டங்கள் கடுமை யானதாக இல்லை. கலப்படம் செய்வோர் மீதான சட்டங்களை மேலும் கடுமையாக்குவதுடன் மக்களிடம் விழிப்புணர்வை மேம் படுத்துவதிலும் 'அக்மார்க்' உள் பட தர முத்திரைகள் மீதான மக்களின் அக்கறையை அதிகரிப் பதிலும் அரசு மேலும் கவனம் செலுத்துவது அவசியம்," என்கின் றனர் சமூக ஆர்வலர்கள்.

கூடுதல் வருவாய் கருதி உண வுப் பொருட்களில் செய்யப்படும் கலப்படம் உடல்நலக்கேட்டுடன் உயிரைக் குடிக்கும் ஆபத்தையும் விளைவிக்கிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் கலப்படம் சொல்லமுடியாத அளவிற்கு உள் ளது. அதிகாரிகள் அடிக்கடி சோதனைகள் நடத்தி கலப்படப் பொருட்களைக் கண்டறிய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.