பழனிசாமி: ரூ.64 கோடியில் 'அம்மா இளையர் விளையாட்டுத் திட்டம்'

பழனிசாமி: ரூ.64 கோடியில் 'அம்மா இளையர் விளையாட்டுத் திட்டம்'

1 mins read

சென்னை: நடப்பாண்டு அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சி களில் ரூ.64.35 கோடி மதிப்பில் 'அம்மா இளைஞர் விளை யாட்டுத் திட்டம்' செயல்படுத்தப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ஒவ்வொரு கிராமத்திலும் கபடி, வாலிபால், கிரிக்கெட், காற்பந்து போன்றவற்றில் ஏதேனும் மூன்று விளையாட்டு களுக்கு களம் அமைக்கப்படும். இப்பணிகள் ஊரகப் பகுதிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழும் பேரூராட்சிகளில் பேரூராட்சி பொது நிதியிலிருந்தும் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.