விஷமருந்திய நாடகம்; விசித்திர தண்டனை

விஷமருந்திய நாடகம்; விசித்திர தண்டனை

1 mins read

காரைக்குடி: நஞ்சு குடித்து உயிரை மாய்த்துக்கொள்வது போல் நாடகமாடி சமூக வலைத் தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்ட பெண்ணுக்கு நீதி மன்றம் விசித்திரமான தண்டனை வழங்கியுள்ளது.

இந்த விசித்திர தண்டனை விஷமருந்தியதாக நாடகமாடிய பெண்ணுக்கும் சமூகத்திற்கும் நல்ல படிப்பினையாக அமையும் என்று இணையவாசிகள் பதி விட்டு வருகின்றனர்.

காரைக்குடியில் கார்த்திகா என்ற பெண் கடந்த மாதம், தாம் பணியாற்றும் இடத்தில் பாலியல் தொந்தரவை அனுபவித்ததாகவும் இதன் காரண மாக கணவருடன் தகராறு ஏற்பட்டுத் தாம் உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக வும் கூறி நச்சு அருந்தும் காணொளியை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டார்.

இதைக் கண்ட காவல்துறை எஸ்.ஐ. தினேஷ் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவ மனையில் அனுமதித்தார். ஆனால், கார்த்திகாவோ 'சோப் ஆயில்' குடித்துவிட்டு நாடகமாடி யது தெரியவந்தது.

இதையடுத்து இக்காணொளி காரைக்குடி குற்ற வியல் நீதித் துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பாலமுருகன் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

எஸ்.ஐ.தினேஷ், கார்த்திகா விடம் விசாரணை நடத்திய நீதி பதி, "கார்த்திகா, அரசு மருத்துவ மனைக்கு ஒருமாத காலத்திற்குத் தினமும் சென்று அங்கே தற் கொலைக்கு முயன்று சிகிச்சை பெறுவோருக்கு உயிரின் மதிப்பு குறித்து விளக்கி அவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கவேண் டும்," என தண்டனை அளித்தார்.