நீரின்றி தவிக்கும் திருமங்கலம் கிராம மக்கள்

நீரின்றி தவிக்கும் திருமங்கலம் கிராம மக்கள்

1 mins read

திருமங்கலம்: திருமங்கலம் அருகே பழுதடைந்த மின் மோட்டாரைச் சரிசெய்து குடிநீர் வழங்க அதிகாரிகள் நட வடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளிக்குடி, மொச்சிக்குளம் பகுதியில் 5,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு ஆழ்துளைக் கிணறு அமைக்கப் பட்டு, நீர்த்தேக்கத் தொட்டி மூலம் பொதுமக்களுக்குக் குடிநீர் வழங் கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நிலத்தடி நீர்மட் டம் குறைந்ததால் குடிநீர் சரிவர கிடைக்கவில்லை எனக் கூறப்படு கிறது. இதனால் அப்பகுதியில் அரசு சார்பில் அமைக்கப்பட்ட குளியலறை தொட்டியில் இருந்து மக்கள் தண்ணீர் எடுத்துப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் ஓராண்டிற்கு முன்பு குளியலறை தொட்டியில் உள்ள மின்மோட்டாரும் பழுத டைந்ததாகவும் இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் எடுப்பதற்காக மூன்று கிலோ மீட்டர் தொலை விற்கு சென்றுவரும் நிலை ஏற்பட் டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.