ஸ்டாலின்: பொய்யுரைத்த சட்ட அமைச்சர் பதவி விலகவேண்டும்

ஸ்டாலின்: பொய்யுரைத்த சட்ட அமைச்சர் பதவி விலகவேண்டும்

2 mins read
84d8a338-46b3-4cbc-b607-ad2a1c435dcc
அமைச்சர் கருத்து குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளிக்கும் மு.க.ஸ்டாலின். படம்: ஊடகம் -

சென்னை: நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு தொடர்பாக எது சரியான தகவலோ அதைக் கூறா மல் பொய் பேசியுள்ள சிவி சண் முகம் தனது சட்டத்துறை அமைச் சர் பதவியை விட்டு விலகவேண் டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

"தமிழக அரசு நிறைவேற்றிய நீட் மசோதாக்களை 19 மாதங் களுக்கு முன்பாகவே மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. இதை ஏன் தமிழக அரசு மறைத் தது. இதை முன்பே சொல்லி யிருந்தால் மீண்டும் சட்டம் இயற்றி அனுப்பியிருக்கலாம்.

"தவறான தகவலைக் கூறியதற் காக சட்ட அமைச்சர் சிவி சண் முகம் பதவி விலகவேண்டும்," என்றார் மு.க.ஸ்டாலின்.

இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் நேற்று எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். அப் போது அவர் பேசுகையில், "தமிழக அரசின் சட்ட மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சண்முகம் தெரிவித்த தகவல் பொய்யானது.

சட்ட மசோதாக்களைச் செப் டம்பர் 2017ஆம் ஆண்டில் மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. ஆனால், இந்தத் தகவலை அமைச்சர் சண்முகம் மறைத்து விட்டுச் சட்டமன்றத்தில் பொய் கூறியுள்ளார். பொய்யான தகவ லைத் தெரிவித்த அமைச்சர் சண்முகம் பதவி விலகவேண் டும்," என ஸ்டாலின் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சண்முகம், "நான் கூறிய தகவல் பொய்யானதாக இருந்தால் பதவி விலகத் தயார். ஆனால், நான் கூறியது உண்மைதான் என்றால் எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் பதவி விலகத் தயாரா?" என்று சவால் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து சட்ட மன்றத்தில் இருந்து திமுக உறுப் பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தி யாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், "நீட் தேர்வில் இருந்து தமிழகத் திற்கு விலக்கு வழங்கவேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் இருந்து 2 மசோதாக்கள் நிறை வேற்றப்பட்டன.

"நிறைவேற்றப்பட்ட தீர்மானங் கள் குடியரசுத் தலைவர் ஒப்பு தலுக்காக அனுப்பிவைக்கப் பட்டன. ஆனால், தற்போது வரை அந்த மசோதாக்கள் கிடப்பில் உள்ளது அனைவருக்கும் தெரியும்.

இது தொடர்பாக நான் கடந்த திங்கட்கிழமை கேள்வி எழுப்பிய போது சி.வி.சண்முகம் பொய் கூறியுள்ளார்.

"தவறாகவும் பொய்யாகவும் பேசும் ஒருவர் அமைச்சர் பதவியில் இருந்துகொண்டு மக்களை ஏமாற் றக் கூடாது," என்றார்.