திருவொற்றியூர்: திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் சாலையில் மிகப்பெரிய லாரியில் ஏற்றிச்சென்ற 122 டன் எடையுள்ள ராட்சத இரும்பு உருளை சாலையில் உருண்டு உருண்டு, சாலையோரம் உள்ள வீடுகளின் அருகே கிடந்ததால் லாரி கண்ணாடியை உடைத்துப் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் சாலையில் ராட்சத லாரி ஒன்று 122 டன் எடைகொண்ட இரும்பு உருளையை ஏற்றிக்கொண்டு வந்தது.
அப்போது பின்னால் மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரியின் ஓட்டுநர் இரும்பு உருளை ஏற்றிச்சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்றுள்ளார். இதற்காக லாரியை ஓட்டுநர் சாலையோரமாக சற்று திருப்பியதாகத் தெரிகிறது.
இதனால் ராட்சத லாரியில் இருந்த இரும்பு உருளை, திடீரென பயங்கர சத்தத்துடன் லாரியில் இருந்து சரிந்து சாலையோரம் இருந்த வீடுகளின் அருகே உருண்டு விழுந் தது. உடனே லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

