மலை கிராமங்களில் 24 துப்பாக்கிகள் பறிமுதல்

மலை கிராமங்களில் 24 துப்பாக்கிகள் பறிமுதல்

1 mins read

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ண கிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டையைச் சேர்ந்த காவல் துறையினர், மலை கிராமங்களில் நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைத்தால் வழக்குப் பதிவு செய்ய மாட்டோம் எனவும் துப்பாக்கிகளை வைத் திருப்பது கண்டுபிடித்தால் ஆயுத சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கிராம நிர்வாக அலு வலர்கள் மூலம் தண்டோரா போட்டு அறிவித்தனர்.

இந் நிலையில், தேன்கனிக்கோட்டை பஞ்சப்பள்ளி சாலையில் உள்ள திப்பசந்திரம் வனப்பகுதியை ஒட்டி 24 நாட்டுத் துப்பாக்கிகள் கேட்பாரற்ற நிலையில் கிடந்தன.