தாராபுரம்: தாராபுரம் மாணவி களைப் பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடாத அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநரை இடை நீக்கம் செய்து அரசு போக்கு வரத்துக் கழக மண்டல மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன் திருப்பூர் மாவட்டம், மங்கலம் பாளையத்தைச் சேர்ந்த 5 மாணவிகளும் ஒரு ஆசிரியையும் தாராபுரத் தில் இருந்து மங்கலம்பாளையத் திற்கு ஈரோட்டில் இருந்து பழனிக்குச் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினார்கள்.
அவர்களை மங்கலம் பாளையம் பேருந்து நிறுத் தத்தில் ஓட்டுநர் சையது அபுதாகீர், நடத்துநர் ராம்நாத் ஆகியோர் இறக்கிவிடாமல் 3 கிலோ மீட்டர் தாண்டி வந்து தேர்பட்டியில் இறங்குமாறு கூறினார்கள்.
அங்கு மாணவிகள் இறங்க மறுத்தனர். அவர்களை ஓட்டுநரும் நடத்துநரும் பழனிக்கு அழைத்துச் சென்று தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.
இதுகுறித்து போலிசில் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஓட்டுநர், நடத்துநர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அத்துமீறி பயணிகளைத் துன்பத்திற்கு ஆளாக்குவது ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே பொதுமக்கள் தாராபுரம் சப்=ஆட்சியர் பவன்குமாரிடமும் புகார் தெரிவித்தனர். அவர் அரசு பேருந்து ஓட்டுநர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து ஓட்டுநர் சையது அபுதாகீர், கண்டக்டர் ராம் நாத் ஆகியோரை சஸ்பெண்டு செய்து அரசு போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர் குணசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

