சென்னை: வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.
இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் கூட்டணி கட்சி வேட் பாளராகப் போட்டியிடும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண் முகம், திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகி யோர் வேட்பாளர்களாக அறிவிக் கப்பட்டுள்ளனர்.
கடந்த முறை போட்டியிட்ட அமமுக இந்த தேர்தலில் போட்டி யிடவில்லை. மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
அதிமுக கூட்டணி கட்சி சார் பில் இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் நேற்று காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியு மான சண்முகசுந்தரத்திடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
அமைச்சர் கே.சி.வீரமணி, பாமக, தேமுதிக, த.மாகா. உள் ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் வந்திருந்தனர்.
இவர் தவிர 4 சுயேச்சை வேட்பாளர்களும் நேற்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இன்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பணப் பட்டுவாடா புகார் தொடர் பாக ஏப்ரல் 16ஆம் தேதி தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்கள வைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை வரும் 18ஆம்தேதி வரை தாக்கல் செய்ய லாம் என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
19ஆம் தேதி மனுக்கள் பரி சீலனை நடக்கிறது. 22ஆம் தேதி வரை மனுக்களை மீட்டுக் கொள்ள லாம். இதையடுத்து அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்யும் வேட்பாளர் வைப்புத் தொகை ரூ.25,000 ரொக்கமாக செலுத்தவேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர் கள் வைப்புத் தொகை ரூ.12,500 செலுத்தவேண்டும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

