ஐவரால் சிறுமி பலாத்காரம்; மூன்று பெண்கள் கைது

ஐவரால் சிறுமி பலாத்காரம்; மூன்று பெண்கள் கைது

2 mins read

சென்னை: சென்னையில் பாட்டி யிடம் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய சிறு மிக்கு மது ஊற்றிக் கொடுத்து அவரை பாலியல் தொழிலில் ஈடு படுத்திய மூன்று பெண்களைப் புளியந்தோப்பு போலிசார் கைது செய்தனர்.

விசாரணையில் ஜெபினா, முபினா பேகம், நிஷா ஆகிய மூன்று பெண்களும் பாலியல் தொழில் தரகர்கள் எனக் கண்ட றியப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தாகவும் போலிசார் கூறினர்.

இந்நிலையில், சிறுமியைப் பாலியல் கொடுமை செய்த ஐவரில் ஒருவன் வடமாநிலத்தைச் சேர்ந்த ராகுல் என்பதையும் அவன் நிஷா வுக்குப் பழக்கமானவன் என்பதை யும் காவல்துறையினர் கண்டுபிடித் துள்ளனர்.

வேலை வாங்கித் தருவதாக சிறுமியை ஏமாற்றி, இரு பெண்கள் வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். இதையடுத்து சிறுமியை ஐவர் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது தாய், பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாட்டியுடன் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டுச் சிறுமி வெளியேறி உள்ளார்.

இதையடுத்துக் கடந்த 3ஆம் தேதி, தனது தோழி சபீனாவின் வீட்டில் தங்கியுள்ளார். அப்பெண் வேலை தேடி வந்துள்ளார். இவரின் தோழி முபீனா பேகம், சிறுமிக்கு வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சபீனா, முபீனா இருவரும் சிறுமியை நிஷா வின் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஒரு அறையில் போட்டுப் பூட்டி 3 நாட்கள் ஐவரால் பாலியல் பலாத் காரத்துக்கு ஆளாக்கியுள்ளனர்.

மூன்று நாட்களுக்குப் பிறகு, அங்கிருந்து தப்பிய சிறுமி தனது வீட்டிற்கு சென்று தாயிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார்.