திமுக எம்.பி. மீது நான்கு பிரிவுகளில் போலிஸ் வழக்கு

திமுக எம்.பி. மீது நான்கு பிரிவுகளில் போலிஸ் வழக்கு

1 mins read

சேலம்: சேலம் மாவட்டம் பெரியசாத்தப்பாடி கிராமத் தில் வனத்துறைக்குச் சொந்தமான காட்டுப் பகுதியை திமுக எம்பி பார்த்திபன் ஆக்கிரமித்துள்ளதாகவும் தட்டிக்கேட்டால் அவர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. விசாரணை நடத்திய மேச்சேரி போலிசார், திமுக எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட நால்வர் மீது அரசு சொத்துகளைத் திருடுதல், கொலை மிரட்டல், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.