மாட்டிறைச்சி சூப்: அடி, உதை

மாட்டிறைச்சி சூப்: அடி, உதை

1 mins read

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது பைசான். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாட்டு இறைச்சி சூப் சாப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை அவர் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். இதனையடுத்து இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த தினேஷ் குமார் தலைமையிலான 20க்கும் மேற்பட்ட கும்பல் நேற்று முன்தினம் இரவு முகம்மது பைசான் வீட்டிற்குள் புகுந்து அவரை கத்தி, இரும்புக் கம்பியால் தாக்கினர். பின்னர் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.