ரூ.100 கோடி அபராதம் செல்லும்

ரூ.100 கோடி அபராதம் செல்லும்

1 mins read

சென்னை: சென்னையில் ஓடும் கூவம், அடையாறு நதிகளையும் பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளையும் பராமரிக்க தமிழக அரசு தவறிவிட்டதாக ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உயர் நீதி்மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நேற்று நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.