மதுரை: தமிழக அரசு சுதந்திரமாக செயல்படவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மத்திய அரசுக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைக்கக்கூடிய இக்கட்டான நிலையில் தமிழக அரசு சிக்கித் தவிப்பதாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் குறிப்பிட்டார்.
"மத்திய அரசின் 8 வழிச்சாலை திட்டம் மக்களுக்கு ஏற்புடையதா? என்று கேட்டறிந்து அமல்படுத்த வேண்டுமே தவிர, அவர்களிடத்தில் திணிக்கக் கூடாது.
"ஒட்டுமொத்த தமிழகமே இந்த திட்டத்தை எதிர்க்கும் நிலையில் தமிழக முதல்வரும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்," என்றார் திருமாவளவன்.
தமிழகம் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் ஆணவப் படுகொலைகள் நடப்பதாகவும், அவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

