சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் கவலைக்கிடம்

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் கவலைக்கிடம்

1 mins read

சென்னை: ஜீவஜோதி என்ற தன் ஊழியரின் கணவர் சாந்தகுமாரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜ

கோபால் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆயுள் தண்டனையை அனுபவிப்பதற்காக நீதிமன்றத்தில் முன்னிலையான ராஜகோபால் கடந்த சில நாட்களாக சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு ராஜகோபாலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.