ஓடும் ரயிலின் கதவைத் திறந்த பெண் கீழே விழுந்து படுகாயம்

ஓடும் ரயிலின் கதவைத் திறந்த பெண் கீழே விழுந்து படுகாயம்

1 mins read

ஆம்பூர்: பெங்களூர் கண்டோன்மெண்ட் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மனைவி உமாதேவி, 50. சென்னை வந்த அவர் சனிக்கிழமை இரவு மைசூர் விரைவு ரயிலில் புறப்பட்டுச் சென்றார். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கண்ணடிகுப்பம் அருகே இரவு 12.30 மணிக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த உமாதேவி கழிவறைக்கு செல்ல எழுந்தார். தூக்கக் கலக்கத்தில் இருந்த அவர் கழிவறைக் கதவு என நினைத்து ரயில் பெட்டியின் கதவைத் திறந்துவிட்டார்.

இதில் கால் தடுமாறிய அவர் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்தார். முதுகு, கால்களில் படுகாயம் அடைந்த அவர் தண்டவாளத்தின் அருகில் எழுந்திருக்க முடியாமல் கிடந்தார். நேற்று முன்தினம் காலை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் உமாதேவியை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.