நான்கு முறை எம்எல்ஏ; ஐந்து முறை கட்சித் தாவல்: பலே ஞானசேகரன்

நான்கு முறை எம்எல்ஏ; ஐந்து முறை கட்சித் தாவல்: பலே ஞானசேகரன்

1 mins read

சென்னை: வேலூர் தொகுதியில் 4 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஞானசேகரன் நேற்று மு.க.ஸ்டாலினைச் சந்தித்து திமுகவில் சேர்ந்தார். 1991 முதல் 2011 வரை தொடர்ந்து 20 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்த ஞானசேகரன் (படம்) தமாகாவில் சேர்ந்தார். பின்னர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார். அத்துடன் நில்லாமல் டிடிவி தினகரனின் அமமுகவில் சேர்ந்தார். உடனடியாக அக்கட்சியில் அவருக்கு மாநில அமைப்புச் செயலாளர் பதவி தரப்பட்டது. தற்போது ஞானசேகரன் ஐந்தாவது முறையாகக் கட்சி தாவி உள்ளார்.