தமிழகத்தைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக தமிழைப் புறக்கணித்து நடத்தப்பட்ட அஞ் சல் துறை தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
அஞ்சல் துறையில் அஞ்சல் காரர் மற்றும் உதவியாளர் பணி யிடங்களை நிரப்ப கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
தேர்வு வினாக்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே இருந்த தால் தமிழ்நாட்டில் அதிர்ச்சி ஏற்பட்டது. மேலும் மத்திய அரசின் போக்கிற்கு கடும் எதிர்ப்பு கிளம் பியது. தமிழ்மொழி புறக்கணிக்கப் பட்டதற்கு எல்லா அரசியல் கட்சி களும் ஒன்றுதிரண்டு எதிர்த்தன.
நாடாளுமன்றத்தின் மாநிலங் களவையில் நேற்று இப்பிரச் சினையை எழுப்பிய தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மொழியில் வினா கேட்கப்படாததற்குக் கண்டனக் குரல் எழுப்பினர். இன்று இப் பிரச்சினை குறித்து அமைச்சர் பதிலளிப்பார் என்று கூறப்பட்டதை ஏற்காத அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அதனால் அவை நடவடிக் கைகள் பாதிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து நேற்று பிற் பகலில் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத் தப்பட்ட அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் வேறொரு தேதியில் தமிழ் உள் ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்றும் அப்போது அவர் அறிவித்தார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பை தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். தமிழக பாஜக தலைவர் தமி ழிசை சௌந்தரராஜன் கூறுகையில் ஜனநாயக முறைப்படி அரசு செயல்படுகிறது என்பதை பாஜக அரசு மீண்டும் நிரூபித்துள் ளதாகக் குறிப்பிட்டார்.
திமுக உயர்மட்டத் தலைவர் ஆர்எஸ் பாரதி கூறுகையில் இது திமுகவின் பேராட்டத்திற்கும் மற்ற கட்சிகளின் ஒத்துழைப்புக்கும் கிடைத்த வெற்றி என்றார்.

