பத்திரப் பதிவு அலுவலகங்களில் லஞ்சப் பணம் சிக்கியது

பத்திரப் பதிவு அலுவலகங்களில் லஞ்சப் பணம் சிக்கியது

1 mins read

திருச்சி: ஆடி மாதம் தொடங்குவதற்கு முன் ஏராளமானோர் தங்களது நிலங்கள், வீடுகளை பத்திரப்பதிவு செய்து வருகின்றனர். இதையொட்டி, சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிகளவில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருச்சி மாவட்டம் உறையூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலிசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல், பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் 6 மணி நேரத்துக்கு மேலாக நடந்த சோதனையில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 700 ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக, சார்பதிவாளர் பாலு உள்பட 9 பேரிடம் லஞ்ச ஒழிப்புப் போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், கோவை சரவணம்பட்டி யிலுள்ள காந்திபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் சார் பதிவாளர் அம்சவேணியின் மேசையில் இருந்து கணக்கில் வராத ரூ.80 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார் கைப்பற்றினர்.