சனிக்கிழமை மட்டும் திருடி வந்த மூவர் சிசிடிவி மூலம் சிக்கினர்

சனிக்கிழமை மட்டும் திருடி வந்த மூவர் சிசிடிவி மூலம் சிக்கினர்

1 mins read

திருப்புலாணி: ராமநாதபுரம் மாவட்டம், திருப்புலாணி, தினைக்குளம், தாமரைக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக சனிக்கிழமை இரவில் கைபேசி, மடிக்கணினி உள்ளிட்ட மின்னணுப் பொருட்கள் அதிகளவில் திருட்டுப் போவதாகத் திருப்புலாணி போலிசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதையடுத்து கிராமங்களின் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா வைத்து திருடர்களைப் போலிசார் தேடி வந்தனர். அப்போது வெவ்வேறு இடங்களில் கடந்த சனிக்கிழமையும் ஜூன் 29ஆம் தேதி சனிக்கிழமையும் ஒரே நபர் திருட்டில் ஈடுபட்டது கேமரா மூலம் தெரிய வந்தது.

இது தொடர்பாக வெங்கடேசன், மகேந்திரன், லோகநாதன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். கீழக்கரையில் வசித்து வரும் மகேந்திரன் உதவியுடன் திருப்புலாணி சுற்றுவட்டார கிராமங்களில் வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை இரவு மட்டும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.