முதல் மரியாதை தகராறு, கொலை

முதல் மரியாதை தகராறு, கொலை

1 mins read

மதுரை: கோயில் திருவிழா தொடர்பாக ஏற்பட்ட தகராறில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் இளமனூரைச் சேர்ந்தவர் காஞ்சிவனம். அண்மையில் நடைபெற்ற கோயில் திருவிழாவின்போது முதல் மரியாதை அளிப்பது தொடர்பாக காஞ்சிவனத்துக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தமது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த காஞ்சிவனத்தை மர்ம நபர்கள் சிலர் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர்.

வழக்குப் பதிவு செய்த போலிசார், கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.