திருச்சி: திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள வாளாடிசிவன் கோயில் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மோகன் - ரமணி தம்பதிகள் சென்று கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்தது. கடந்த 14ஆம் தேதி திருமணமான அவர்களுடன் மோகனின் நண்பர் ரஞ்சித்தும் அதே வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் மோகனும் ரஞ்சித்தும் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த புதுப்பெண் ரமணி திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தில் புது மாப்பிள்ளை மரணம்
1 mins read

