வேலூர்: வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச்செல்லப்பட்ட 10 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். காட்பாடி காந்தி நகரைச் சேர்ந்த பிரவீன் ராஜ் வங்கியில் செலுத்துவதற்காக பணத்தை கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. எனினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வேலூர் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வேலூரில் ரூ.10 லட்சம் பறிமுதல்
1 mins read

