சரணவபவன் நிறுவனர் காலமானார்

சரணவபவன் நிறுவனர் காலமானார்

1 mins read
021f838a-e5bd-4d67-84ab-964dc39bf8b6
-

சென்னை: கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த சரவணபவன் உணவகத்தை நிறுவிய பி.ராஜகோபால் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ராஜகோபால் குற்றவாளி என்று இந்திய உச்ச நீதிமன்றம் அண்மையில் உறுதி செய்தது. ஜூலை மாதம் 10ஆம் தேதியன்று 72 வயது ராஜகோபால் மருத்துவ உதவி வாகனத்தில் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று சரணடைந்தார்.

தனது உணவகத்தில் பணிபுரிந்த பிரின்ஸ் சாந்தகுமார் என்ற ஊழியரின் மனைவியைத் திருமணம் செய்வதற்காக சாந்தகுமாரை ராஜகோபால் கொலை செய்தததாக உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.