தமிழகத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள்

தமிழகத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள்

1 mins read
43a9f7d7-dbc4-4873-addc-2a7b861675ec
வரைபடம்: கூகல் -

தமிழகத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாகவிருப்பதாக மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். அவற்றில் ஒன்று, திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியையும் மற்றொன்று காஞ்சிபுர மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டையும் தலைநகர்களாகக் கொண்டு உருவாக்கப்படும் என்று திரு பழனிசாமி கூறினார்.

நிர்வாக வசதிக்காக இந்த மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. புதிய மாவட்டங்களுடன் சேர்ந்து தமிழகத்தில் இப்போது 35 மாவட்டங்கள் உள்ளன. இதற்காக இரண்டு தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தின்கீழ் தென்காசி, சிவகிரி, அம்பாசமுத்திரம், செங்கோட்டை, கடையநல்லூர் ஆகிய வட்டங்கள் உள்ளடங்கும்.