சென்னை: தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகளை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இதுகுறித்த ஆய்வுப் பணிகளும் தொடங்கியுள்ளன.
உண்ண சரியான உணவுப் பொருட்களின்றி தவிக்கும் ஏைழ மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை வசதிபடைத்த மக்கள் பறித்து வருகின்றனர்.
ஏழை மக்களின் வாய்ப்பை தட்டிப்பறிக்கும் பணக்கார மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை முறைப்படுத்த தமிழக அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
வீட்டில் குளிர்சாதன வசதி, கார் உள்ளிட்ட 10 அம்சங்களில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் முன்னுரிமை வழங்கப்படும் குடும்ப அட்டைக்கான சலுகைகள் பறிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
வசதி படைத்தவர்கள் மானியத்தில் பொருட்களைப் பெறும் குடும்ப அட்டைகளை பயன்படுத்துவதாக தொடர் புகார்கள் இருந்தன.
அதுமட்டுமின்றி போலி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இைதயடுத்து தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகளை ஆய்வு செய்யும் பணிக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி முன்னுரிமைப் பிரிவில் இருந்து நீக்கப்பட வேண்டிய குடும்பங்களுக்கான விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன.
வருமான வரி் செலுத்தும் நபரை குறைந்தது ஒரு உறுப்பினராக கொண்ட குடும்பம், தொழில் வரி் செலுத்துவோரை உறுப்பினராகக் கொண்ட குடும்பம், 5 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்துள்ள விவசாயியை கொண்ட குடும்பம், மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளில் ஓய்வு பெற்றவரை உறுப்பினராகக் கொண்ட குடும்பம், காரை சொந்த பயன்பாட்டுக்கு வைத்துள்ள குடும்பம், குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தும் குடும்பம், மூவறை கொண்ட கான்கிரீட் வீடுகள் உள்ள குடும்பம், வணிக நிறுவனங்களைச் செயல்படுத்தும் குடும்பம், ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கும் மேல் உள்ள குடும்பத்தினர் ஆகியோர் சலுகைகள் பெற்றுவந்தால் இனிமேல் அது நீடிக்காமல் உடடினயாக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

