விழுப்புரம், திருச்செந்தூர் விபத்தில் 15 பேர் பலி

விழுப்புரம், திருச்செந்தூர் விபத்தில் 15 பேர் பலி

1 mins read

திருநெல்வேலி: தமிழகத்தில் விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய இரு வேறு இடங்களில் நடந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

கள்ளக்குறிச்சி அருகே ஏமப்பேரில் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

நேற்று அதிகாலை 3 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்தில் சென்னை யிலிருந்து காங்கேயம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த காரில் பயணித்த எழுவரும் பேருந்தில் பயணம் செய்த இருவரும் உயிரிழந்தனர்.

ஆம்னி பேருந்து ஓட்டுநர், ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 8 பேர் உட்பட 9 பேர் இந்த விபத்தில் பலியாகினர். இந்த விபத்து குறித்து போலிசாரின் விசாரணை தொடர்கிறது.

இந்நிலையில விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த திருத்தங்கல் கிராமத்திலிருந்து பயணிகள் வேன் ஒன்று திருச்செந்தூர் நோக்கிச் சென்றது.

வேன் நேற்று அதிகாலை 1.30 மணி யளவில் திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் கருங்குளம் என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த அறுவர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 11 பேர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் பலியானவர்கள் திருத்தங்கல் இந்திராநகர் பாண்டியன் நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.