உயர் நீதிமன்றம்: எழுவர் விடுதலையில் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது

உயர் நீதிமன்றம்: எழுவர் விடுதலையில் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது

1 mins read

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனைஅனுபவித்து வரும் நளினி, ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற எழுவரையும் விடுதலை செய்வது குறித்து ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

"ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. ஆளுநர் என்பவர் அதிகாரம் கொண்டவர். அவருக்கு நீதிமன்றம் இைத செய்யுங்கள், அதைக் கூறுங்கள் என்றெல்லாம் உத்தரவிட முடியாது," என்று நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள் கூறினர்.